Breaking News

பயங்கரவாத தடைச்சட்டத்தை பின்பற்றிய அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியே?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமு றைகளைப் பின்பற்றியே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


அவ்வாறாயின் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சாத்தியமற்றது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிருக முகத்தினைக் கொண்டுள்ளது. அதனால்தான் தமிழ் அரசியல் கைதிகள் மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

அடுத்த ஆண்டிலாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவொரு விசாரணையுமின்றி விடுதலை செய்யப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.