Breaking News

கூட்டமைப்பினர் மீது தாக்குதல் சம்பவம்.. மூவருக்கு யாழ்.நீதிமன்று மரண தண்டனை



2001 ம் ஆண்டு நாரந்தனைப்பகுதியில் கூட்டமைப்பினர்மீது ஈ.பி.டி.பியினர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரணதண்டனை விதித்து யாழ் மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் 18 பேரை காயப்படுத்தியமைக்காக 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதோடு 4 வது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.