Breaking News

பொருத்துவீட்டின் ஊழல் பணம் யாரிடம் செல்கின்றது என்பது எமக்கு தெரியும்

பொருத்துவீட்டு திட்டம் ஊடான ஊழல் பணம் எங்கு செல்கின்றது என்ற விடயம் தமது தெரியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்த விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அடிப்படையாக மிகவும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களுக்கு வீடே வேண்டும் ஒழிய, இரும்பு கூடு வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் தொடர்ந்தும் வலியுறுத்திவருவதாக அவர் கூறியுள்ளார்.

சாதாரண வீடொன்றை அமைப்பதற்கான செலவை விட இரட்டிப்பு செலவில் தற்காலிக இரும்பு கூட்டை கொடுப்பதன் ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை இடம்பெறுவதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.