லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று வௌியிட்டது.
இந்தநிலையில் நேற்றையதினம் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது,
"அது இன்றைய ஒன்றல்லவே, நான் அவருடன் பேசுவதுதானே, அதை நான் பேசினேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. ஆனால் அவருடன் (லசந்த) எப்போதும் பேசுவேன்.
அவருக்கு பேசுவதை எல்லாம் பதிவு செய்யும் பழக்கம் உள்ளது என அணைவருக்கும் தெரியும். அவர் ஊடகவியளாளர் தானே.." எனக் குறிப்பிட்டார்.