நோய்வாய்ப்பட்டுள்ள இளைஞனுக்கு மாலிங்க வழங்கிய பணத்தில் மோசடி
நரம்பு தளர்ச்சியினால் அவதியுறும் இளைஞர் ஒருவருக்கு கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவினால் வழங்கப்பட்ட பண உதவியில் ஒரு பகுதியினை நபரொருவர் மிரட்டல் விடுத்து வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வைரலாக பரவியிருந்தது.
அது குறித்து விசாரிக்கையில், குறித்த நோய்க்கு ஆளாகியுள்ள இளைஞன் மாதம்பை, கலபொட என்ற இடத்தினை வசிப்பிடமாகக் கொண்டவரென்றும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு போதியளவு பொருளாதாரம் காணாதவிடத்து அது குறித்து சமூக வலையத்தளம் ஒன்றினூடாக உதவி கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தி தொடர்பில் அவதானம் செலுத்திய கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்று குறித்த இளைஞனின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தினை வழங்கி உதவியுள்ளார்.
லசித் மாலிங்க பணத்தினை வழங்கியுள்ளது குறித்த இளைஞனின் தாயாரிடம்… எவ்வாறாயினும், குறித்த செய்தியினை சமூக வலையத்தலத்திற்கு வழங்கியதாக கூறி நபரொருவர் தனக்கு 60 000 ரூபா வேண்டுமென இளைஞனின் தாயாரிடம் கோரியுள்ளார்.
மற்றும் மாதத்திற்கு இன்னும் 10 000 ரூபா வழங்க வேண்டுமெனவும் மிரட்டியுள்ளார்.
இவ்வாறு மிரட்டல் விடுத்த குறித்த நபர் காலி, ரத்கம பிரதேசத்திலுள்ள பிரதேச நிரூபரான ரொஷான் பியதிலக என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இது குறித்து லசித் மாலிங்க கூறுகையில்; தனக்கும் குறித்த சம்பவம் கேள்வியுற்றதாகவும்,இவ்வாறான செயல்களிலான உண்மையில் மன வேதனையடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நோயுற்ற இளைஞனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ தான் தயார் எனவும் மாலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.