Breaking News

வெடிபொருட்களுடன் சென்ற மூவர் வவுனியா பொலிஸாரால் கைது

ஏ-9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் வெடிபொருட்களுடன் சென்ற மூவரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வவுனியா போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெக்னேற்றர் வெடிபொருள்- 199, ஜெக்னேற்றர் தொப்பி – 200, 10 மீற்றர் நீளமான வயர் றோல் – 5, பயணப்பை – 02, என்பன கைப்பற்றப்பட்டதுடன், முச்சக்கர வண்டியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிபொருட்களை கொண்டு சென்றமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.