கேப்பாபிலவில் ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிக்க ஏற்பாடு!
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனவரி மாதம் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக பதிவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதாகவும், அன்றையநாளில் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடமொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள 300 பேருக்கு சொந்தமான காணி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.