மகிந்த ஏற்பாட்டில் யாழ் வருகிறார் இளையராஜா?
மேற்கொண்டு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள இனவாதி மஹிந்தராஜபக்ச அணியினரின் ஏற்பாட்டில் வடக்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக தென்னிந்திய திரையிசை இசையமைப்பாளர் இளையராஜா யாழ்ப்பாணம் அழைத்துவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகள் மீது தீவிர அவதூறுபரப்பிவருபவரும் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் தீவிர நம்பிக்கைக்குரியவருமான ஏசியன் ரிபியூன் இணையத்தள ஆசிரியர் செய்தி ஆசிரியர் கே.பி.ராஜசிங்கம் உட்பட்டவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் மற்றும் அரச தொலைக்காட்சியினரின் ஏற்பாட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பாடகர் எஸ்பிபாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் இளையராஜாவை வடக்கிற்கு அழைத்துவருவதற்கான ஏற்பாட்டில் மஹிந்த தரப்பு ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்