கூட்டமைப்பை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு
அரசாங்கத்தை காப்பாற்றும் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: கூட்டமைப்பை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எழுக தமிழோடு உண்டான சரிவை நிமிர்த்த வேண்டாமா..!
"இதே மாதிரியான மாவீர்ர தினத்தை" பேரவையோ, முன்னணியோ ஒழுங்குபடுத்தியிருந்தால் முன்னுக்கு நிக்கும் பெடியளில் முக்கால்வாசிப்பேர் மீது இன்னேரம் சட்டம் தன் கடமையை முடிச்சிருக்கும். அவர்களின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் மிரட்டலான கைதுகள், பேரவையின் - முன்னணியின் மிச்சசொச்ச ஆதரவாளர்களையும் தலைதெறிக்க வைத்துவிடும்.
அதன் பின்னர் பேரவை மீதும், முன்னணி மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை எப்பிடியிருக்கும் என்பதற்கு எழுக தமிழே சாட்சி. அந்த விமர்சனங்களையும் மீறி செய்திருந்தால் தெற்கின் இனவாதிகள் குழம்பியிருப்பர். தீர்வு பல வருடங்கள் பின்னால் போயிருக்கும். இப்போதே தீர்வு அடுத்த தீபாவளி வரை பின்போனதற்கு எழுக தமிழ் தீர்வு குழப்பிகள் தான் காரணம் என ஆவரங்கால் சின்னத்துரை என்ற தெற்காசிய நல்லிணக்க விவகாரங்களுக்கான ஆய்வாளர் எழுதுகின்றார்.
இப்படியானதொரு சதிமிகு ஜனநாயக சூழலில் - எந்தப் பக்கம் திரும்பினாலும் முட்டுச் சந்தியில் முட்டிக்கொண்டு நிற்கும் பேரவையும், முன்னணியும் என்ன செய்யமுடியும் என நீங்கள் நினைக்கிறியள்?
#மாவீரர்தினஅரசியல் - ஜெரா