ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி ஞாபகார்த்த தூபிக்கு முன்னால் மலரஞ்சலி செலுத்தி நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மண்முனை தென்எருவில் பற்றுபிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர்இ மற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள்இ உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
சுனாமி அனர்த்தத்தினால் ஓந்தாச்சிமடம் கிராமத்திலிருந்து 44 பேர் உயிரிந்தனர்..
இந்நிலையில் களுவாஞ்சிகுடிஇ குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சுனாமி ஞாபகார்த்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.