'சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர்'
கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்றுவருகின்ற சிங்கள-இந்து பக்தர்களின் செயற்பாட்டை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர் என்று சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். விகாரைகளில் சிவபெருமான், விஷ்ணு மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களின் சிலைகள் இருகின்றன அதனை வணங்குகின்றனர். அதேபோல, இந்து கோயில்களில் புத்தரின் சிலை இருகின்றது.
இந்துக்குள் அதனை வணங்குகின்றனர் எனினும், வெளியில் வந்து அடித்துகொள்கின்றனர். இதனை பார்த்தே சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர் என்று நீதியமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில், புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கிறது. இதன்போது குறுக்கிட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான கெஹலிய ரம்புக்வெல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர்தான், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரர். வடக்கில், பௌத்த விகாரைகளை நிர்மாணிக்கமுடியாது என்று அவர் கொண்டுவந்திருக்கும் யோசனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
எனினும், வடக்கில் 19ஆயிரம் சிங்களவர்கள் இருந்தனர். அதேபோல 80 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர் என்பதனை சுட்டிக்காட்டினார். இதன்போது பதிலளித்து உரையாற்றும் போதே இனவாதமே சிலருக்கு ஒட்சீஜன், இது அதிகாரத்தை பிடிக்கும் செயலாகும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது . பிரிதானியர்களால் பிரித்தாலும் கொள்கையின் காரணமாக, இன்னும் சேற்றுநீரில் குளித்துகொண்டிருக்கின்றோம். அதிலிருந்து மீண்டெழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.