பிரபாகரனை காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய அமெரிக்கா?
பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன் றில் பரபரப்பு தகவல் வெளியாகி யுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசி நேரங்களில்
அமெரிக்கா போராட்டம் நடத்தியதாகவும் இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும் நோர்வே யும் முயற்சித்தன. இதை இந்தியா எதிர்
த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவ்சங்கர் மேனன் தம்முடைய புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அதிகாரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுரகத்தில் பணியாற்றியவருமான
டயா கேமேஜ் “Tamil Tigers’ Debt to America: US Foreign – Policy Adventurism & Sri Lanka’s Dilemma” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்களின் போது பிரபாகரன் மற்றும் தளபதிகளைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்தது குறித்து இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் இலங்கை மீது சர்வதேச நிதியம் மூலமான நெருக்கடி தடைகளையும் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்படுத்தி பணிய வைக்கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் என்னதான் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தாலும் அந்த அமைப்பினால் அமெரிக்காவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கருதியது. அதே நேரத்தில் இலங்கையை இரண்டாகப் பிரிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்பியது எனவும் அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனின் Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்காவும் நோர்வேயும் முயற்சித்த போது அதனை இந்தியா எதிர்த்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்திய மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பினை தமிழக அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் வரவேற்றனர். இந்தியாவில் வாழும் தமிழ்த் தலைவர்களை பௌதீக ரீதியில் இல்லாமல் செய்வதன் மூலமே பிரபாகரன் தமிழீழத்தை உருவாக்குவார் என்பதனை தமிழக அரசியல் தலைமைகள் புரிந்து வைத்திருந்தனர்.
இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகளை புலிகள் கொலை செய்திருந்தனர். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழக மாநில அரசியல் தலைமைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளியில் தென்பட்டாலும், இரண்டு தரப்புக்களும் ஒரே விதமான கொள்கைகளை பின்பற்றின .திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே விதமான கொள்கைகளையே பின்பற்றின. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட்டது.
வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் காணப்பட்ட தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலித் தலைமைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை. மேற்குலக நாடுகள் அதற்கு முயற்சித்தன.
பிரபாகரன் நடைமுறைச் சாத்தியமில்லா கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றிய காரணத்தால் புலிகள் இயக்கம் அழிந்ததுடன் அவரும் உயிரிழக்க நேரிட்டது.
இறுதிக் கட்ட யுத்தம் இன்னும் தாமதமாகியிருந்தால் உயிர்ச் சேதங்கள் மேலும் உயர்வடைந்திருக்கலாம். பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், இவ்வாறான யுத்தங்களின் போது உயிர்ச் சேதங்களை தவிர்க்க முடியாது.
200 பில்லியன் டொலர் செலவு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்திற்காக இந்தளவு தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.
தெற்காசியாவின் மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கையின் பொருளாதாரம் காணப்பட்டது .
இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்களாவர், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினராவர்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்ததிருந்தன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.