இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் உபய மெடவெல சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றதையடுத்தே,இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக,கடந்த நொவம்பர் 4ஆம் நாள் தொடக்கம், இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.