விக்கியின் கோரிக்கையை நிறைவேற்றினார் ஜனாதிபதி மைத்திரி
வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வட மாகாண திறைசேரிக்கு 500 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 34 சதவீதமான நிதியே மாகாண திறைசேரிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஏனைய நிதியையும் இவ்வாண்டிற்குள் விடுவிக்குமாறு முதலமைச்சர் கோரியிருந்தார்.
இதன் பிரகாரம் இவ்வருட இறுதிக்குள் முழுமையான நிதியை வட மாகாண சபைக்கு விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக தற்போது வட மாகாண திறைசேரிக்கு 500 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.