பிரதமருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டேன்!
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்புத் தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் எவ்வாறு கலந்துகொள்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று இன்று மாலை 3 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்புக்கு, ஒன்பது மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.