Breaking News

திடீரென மயங்கி விழுந்த முன்னாள் போராளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு



புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வரும் நிலையில், வவுனியாவைச் சேர்ந்த மற்றுமொரு முன்னாள் போராளி திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி – குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆசீர்வாதம் ஸரிபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென மயக்கமடைந்த பின்னர் உயிரிழந்துள்ளார்.