Breaking News

வடமாகாண சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு

வடமாகாண சபைக்கான 2017ம் ஆண்டின் பாதீடு இன்று முதலமைச்சர் சீ.வி.வினேஸ்வரனினால் சபைப்படுத்தப்பட்டது. 

வட மாகாணசபைக்கு 2017ஆம் ஆண்டுக்கு மீண்டெழும் செலவினங்களுக்காக 19 ஆயிரத்து 321.73 மில்லியன் ரூபாவும், மூலதன செலவினங்களுக்காக 2 ஆயிரத்து 208.38 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டு-உள்நாட்டு நிதியளிப்புகளுக்கூடான கருத்திட்டங்களுக்கு 3 ஆயிரத்து 409.73 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், 2017ம் ஆண்டுக்கு வட மாகாண சபையினால் கோரப்பட்ட நிதித்தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவினத்திற்காக ரூபா 22, ஆயிரத்து 329.613 மில்லியன்கள் நிதித்தேவை முன்வைக்கப்பட்டது.

எனினும் ரூபா 19 ஆயிரத்து 321.737 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றது.இது கோரப்பட்ட தொகையின் 86.5 சதவீதமாகும்.

இதேவேளை, மூலதனச்செலவின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடையின் மூலம் ரூபா 10 ஆயிரத்து 672.48 மில்லியன் நிதித்தேவைகள் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனப்போதும் ரூபா ஆயிரத்து 657.18 மில்லியன்களே அனுமதிக்கப்பட்ட தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதன்படி கோரியத் தொகையில் 16சதவீத நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையினை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டுக்கு கூடுதலாக 16 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

பாதீடு இன்று முன்வைக்கப்பட்ட நிலையில் மூன்று தினங்களுக்கு விவாதம் இடம்பெற்ற நாளை மறுதினம் வாக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளது.