முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் சிலை
மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் குறித்த சிலையை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முல்லைத்தீவில் நிறுவவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் இருபத்தைந்தாவது அமர்வில் முல்லைத்தீவில் பண்டாரவன்னியனின் சிலையொன்று நிறுவப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கான செலவினை மாகாணத்தின் கலாசாரத்திணைக்களம் பொறுப்பெடு க்க வேண்டுமென்ற கோரிக்கையும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய தற்போது முல்லைத்தீவு பிரதேச சபை வளாகத்திற்கு அருகில் பண்டாரவன்னியன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.