சமஷ்டியை முன்வைப்பதில்லை பெளத்தத்திற்கு முன்னுரிமை!
அரசியல் யாப்பில் பெளத்த மதத்திற்கு வழங்கப் பட்டுள்ள முன்னுரிமையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ள தாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்ப ந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மகிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினை க்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் மகிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் வரை அதேபோல் உண்மையான பௌத்த மதத்தவனாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்க இடமளிக்கப்படமாட்டாது. அது மாத்திரமன்றி நீக்கவும் அனுமதியோம். அதேபோல் சமஷ்டி அல்லது வேறு எந்த வழியிலாகவோ நாட்டை பிரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என்பதையும உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றோம்.
இவை மாத்திரமன்றி வடக்கு - கிழக்கு அல்லது வேறு எந்த மாகாணங்களையும் இணைக்கவும் இடமளிக்க மாட்டோம். எதிர் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறுவது போல் ஒற்றையாட்சி நீக்கப்படவோ சமஷ்டி முறை ஏற்படுத்தவோமாட்டாது என்பதை மாநாயக்கத் தேரர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் சில ஊடகங்களில் வெளியான புதிதாக தேசிய கீதமொன்று தயாரிக்கப்படுவதாக வெளியா கும் செய்திகளிலும் உண்மையில்லை என்பதை எடுத்துரைத்தோம். அதனை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பாடலாம்.
சம்பந்தன் இருக்கும் காலத்திலேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எமது நாட்டில் தற்போது தமிழர் ஒருவராக இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருக்கின்றார். சிறந்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன், வரலாற்றில் எமக்குக் கிடை த்த சுமுகமாக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ளக் கிடைத்த சிறந்த அரசியல் தலைவர் ஆவார். சம்பந்தனுடன் நாமும் கலந்துரையாடினோம். அந்த சந்தர்ப்பங்க ளில் இந்த நாடு பௌத்த நாடு என்பதை அவ ரும் ஏற்றுக்கொண்டதுடன் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் தான் அதனை முன்வைக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அவர் பல தடவைகள் எம்மிடம் கூறியிருக்கின்றார். அதேபோல் தான் ஒருபோதும் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
சம்பந்தன் போன்ற மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியிடமிருந்து இவ்வாறான கருத்துக்களை வெளியாகும் போதே நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.