அமைச்சுப் பதவிகளுக்காக ‘நாம் போராடவில்லை
“மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம்” என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தில், புதிய கட்டடத்திறப்பு விழா நிகழ்வு, நேற்று (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா, மேற்கண்டவாறு தெரிவித்தார்.