Breaking News

ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசினார் பான் கீ மூன்

ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகிச் செல்லவுள்ள பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


நேற்று குறுகிய நேரம் நடந்த இந்த தொலைபேசிய உரையாடலின் போது, சிறிலங்காவுக்கு பான் கீ மூன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தாம் வரவேற்றதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கீச்சக பதிவு (ருவிட்டர்) குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் நாளுடன் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தென்கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.