மாவீரர் தினம் கொண்டாட தடையில்லை
“2010ஆம் ஆண்டுக்கு முன்னர், வடமாகாணத்தின் நிர்வாகங்கள் சரியாக இயங்கியுள்ளன. எனினும், 2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறு இயங்கவில்லை” என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி, வைபவ ரீதியாக, நேற்று (22) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, “நடந்தவை நடந்துவிட்டன.
எதிர்காலத்தில் ஒன்றிணைந்து, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்போம். மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பில், அரச அதிகாரிகள் அக்கறை கொள்ளவேண்டும். மக்களுக்கான சேவையில், எந்நேரமும் ஈடுபட வேண்டும். உள்நாட்டு அலுவல்கள் தொடர்பில், நாடளாவிய ரீதியில், நடமாடும் சேவையை மேற்கொண்டு வருகின்றோம்.
அண்மையில் பொலன்னறுவையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. காலி மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த நடமாடும் சேவையை, விரைவில் கிளிநொச்சியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.