அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம்: வடமாகாண சபை நிராகரிப்பு
மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக குறித்த சட்டமூலத்தை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே இன்று பிற்பகல் 3 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
எனினும் இது தொடர்பில் தனக்கு எவ்வித அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.