மைத்திரியிடம் இரகசிய கோரிக்கை விடுத்த மஹிந்த!
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலை இல்லாமல் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம், மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த துறைமுகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களே பணியாற்றுகின்றனர். அவர்களை வேலையிலிருந்து நீக்குவது அநீதியான செயலாகும்.
துறைமுகத்தின் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நிரந்த நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
இன்றையதினம் வேலைக்கு திரும்பாத ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் பணியிலிருந்து விலகிக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில், அவனைரும் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என துறைமுக அமைச்சர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.