Breaking News

எமது முடிவினை அறிவித்துவிட்டோம்! கூட்டமைப்பு திட்டவட்டம்



13 ஆவது திருத்தம் குறித்தோ மாகாண சபை அதி­கா­ரங்கள் பற்­றியோ பேசவேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இல்லை. எங்கள் நிலைப்­பாடு தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­டனும் தெளி­வாகப் பேசி­யுள்ளோம். கட்­சியின் தலைவர் அல்­லாத எவ­ருக்கும் பதில் அளிக்க வேண்­டிய தேவை எமக்­கில்லை என்று யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

பொலிஸ், காணி அதி­கா­ரங்­க­ளுடன் 13 ஐ அமுல்­ப­டுத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியின் விசேட குழு ஜனா­தி­ப­திக்கு விரைவில் அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளமை தொடர்பாகவும் ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளைபெறுவதற்கு கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்று சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா கருத்து தெரிவித்துள்ளமை குறித்தும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வு, வட­கி­ழக்கு இணைப்பு என்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராகி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­க­ளி­டமும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்­க­ளிடம் எமது உறு­தி­யான நிலைப்­பாட்டை தெளி­வா­கவும் விரி­வா­கவும் எடுத்துக் கூறி­யுள்ளோம். எமது உறு­தி­யான நிலைப்­பாடு பற்றி அவர்கள் தெரிந்து கொண்­டுள்­ளனர். ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய அபிப்­பி­ரா­யங்­க­ளுக்கும் பதில் சொல்ல வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இல்லை.

கட்­சியின் தலை­வர்கள் அல்­லா­த­வர்கள் எதையும் கூறிக்­கொண்­டி­ருக்­கட்டும். அவற்­றுக்கு பதில் அளிக்க வேண்­டிய தேவை எமக்­கில்லை. கூட்டமைப்பினராகிய நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எவ­ரி­டமும் 13 ஆவது ­தி­ருத்தம் பற்றி கதைக்­க­வே­யில்லை. சமஷ்டி, இணைப்பு என்ற விவ­கா­ரங்­களில் உறுதி கொண்­ட­வர்­க­ளாக நாம் உள்ளோம் என்­பதை பல்­வேறு சந்­திப்பின் போதும் ஊட­கங்­களின் வாயி­லா­கவும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

ஐ.தே.கட்­சியின் தலை­மைப்­பீடம் மற்றும் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைப்­பீடம் என எல்­லோ­ரி­டமும் எமது நிலைப்­பாட்டை தெளி­வு­படச் சொல்­லி­யுள்ளோம். எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையின் போதும் கூட்­ட­மைப்பு 13 ஆவது திருத்தம் பற்றி உரை­யா­ட­வே­யில்லை. சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரப் பகிர்­வையும் வட­கி­ழக்கு இணைந்த பிர­தே­சத்தில் முஸ்லிம் மக்­களும் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் உடன்­பாட்­டுக்கு வர­வேண்டும்.

தன்­னாட்­சி­யொன்றின் மூலம் அதி­காரப் பகிர்வை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யா­க­வுள்ளோம்.

ஒற்­றை­யாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெற முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள தயாராகவுமில்லை. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் பொழுது இதுபற்றி நாம் தெளிவாக முறையாக உரையாடவுள்ளோம் என்றார்.