ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு உடுத்துறையில் அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு பருத்தித்துறை உடுத்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உடுத்துறை ஆழிப்பேரலை நிறைவுவாலய வளைவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.