ஜெயலலிதா மரணத்தில் மர்மம் -தோழி நீதிமன்றத்தில் மனு..!
ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி உயிரிழந்தார்.மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்கள் பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டு வளாகத்தில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இதற்காக போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.