Breaking News

பரசூட்டின் மூலமாவது நாம் பாராளுமன்றத்திற்கு வருவோம்



“பாராளுமன்ற உறுப்பினர்களை உட்செல்லும் போதோ அல்லது வெளியேறும் போதோ இடையூறு விளைவிக்க முடியாது. இருப்பினும் எங்களுக்கு வீதி மூடப்படுவதாக கூறி அனுமதியளிக்கப்ப டவில்லை” இவ்வாறு தடை ஏற்படுத்தினால் புதிய அரசியல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது பரசூட்டினை பயன்படுத்தியாவது பாராளுமன்றத்திற்குள் வருவோமென நேற்று திங்கட்கிழமை பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தவிர தமிழீழம் தொடர்பான யோசனைகளை எதுவும் கொண்டு வந்தாலும் அதனை தடுத்து விடும் அரசாங்கமாகவே இவர்கள் உள்ளனர். நாட்டிற்கு அவசிய பிரச்சினை தொடர்பில் பேசுவதே எதிர்க்கட்சியின் கடமை அதில் இருப்பவர்கள் சம்பந்தனும் அனுர திஸாநாயக்கவே உள்ளனர்.ஆனால் அவர்கள் ஒருபோதும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேசமாட்டார்கள்.

குறிப்பாக சம்பந்தன்அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக செயற்படாமல் வடக்கு மாகாணத்துக்கு எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார்.அவ்வாறு பொறுப்பு வாய்ந்தவராக கருதப்படுபவராக அனுரகுமார திஸாநாயக்கவே உள்ளார்.

அந்த பலத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பெரும் போராட்டங்களை ஏற்படுத்தி வெற்றி பெற்றுக்கொண்டதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.