Breaking News

சிக்கலான விடயங்களை ஆளுநருடன் கலந்துரையாட தீர்மானம்

வடமாகாணசபையில் பேசப்படுகிற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் கலந்துரையாட அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு அதிகாரம் உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபையின் 70 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன் போது உறுப்பினர்கள் சபையில் பேசும் சில சிக்கலுக்குரிய விடயங்கள் தொடர்பாக ஆளுநர் றெஜினோல்ட் குரேயுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து அவை தலைவருக்கு குறித்த அதிகாரம் உண்டா என கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஷ்வரன் அவைதலைவருக்கு அந்த உரித்து முழுமையாக உள்ளது என கூறினார்.