Breaking News

கருணாவை பாதுகாக்க மகிந்த கொடுத்த பரிசு 800 மில்லியன்?



முன்னைய மகிந்த ராஜபஷ்சவின் காலத்தில் ஹொங்கொங்கில் இருந்து 2010 ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டு ஜனாதிபதியின் பாவனைக்கென மோட்டார் வாகன தினைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அதிநவீன குண்டு துளைக்காத வாகனம் நிதி மோசடி விசாரணை பிரிவினால் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கருணா எனப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த வாகனத்தை பயன்ப்படுத்தியுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வாகனத்தில் கருணாவுக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி சுமார் 800 மில்லியன் எனவும் மதிப்பிடபட்டிருக்கின்றது.இந்த வாகனத்தை முன்யை ஜனாதிபதி மகிந்த பாதுகாப்பு காரணத்தால் கருணாவிற்கு வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனம் ஜனாதிபதி செயலக பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்டதாக மோட்டார் வாகனங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தபோதும் அதற்கான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.