தமிழீழத்தை உருவாக்க 6 ஆம் உறுப்புரையை நீக்கவும்- ஜெனீவாவுக்கு பிரேரணை
இலங்கையில் தமிழீழ அரசொன்றை உருவாக்கும் பிரேரணையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரேரணையை மதுரையிலுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் முன்வைத்துள்ளார். இவரின் இந்தப் பிரேரணைக்கு அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் ரம்ஸே கிளாக்கும் பங்களிப்புச் செய்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது உறுப்புரை, தமிழீழமொன்று உருவாக தடையாகவுள்ளதாகவும், இதனால், குறித்த உறுப்புரையை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பிரேரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற பிரேரணையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.