Breaking News

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? – இலங்கைக்கு சீனத் தூதுவர் சவால்



கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவில் சீனா மறைமுகமான எந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்கவில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறேன்.

முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் நாம் பிரதான கவனத்தைச் செலுத்துவோம்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவில் 5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதில் சீனா அர்ப்பணிப்புடன் இருக்கிறது

சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகள் தனி ஒரு அரசியல் தலைவரிலோ, அரசியல் கட்சியிலோ தங்கியிருக்கவில்லை.

அதிகாரத்தில் எந்தக் கட்சி இருந்தாலும், சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா?

நாங்கள் ஒன்றும் பொருளாதார விலங்கு அல்ல.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒன்றரை ஆண்டுகள் முடக்கப்பட்டதால், 5000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சீனாவின் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டதற்கு, வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு அரசியல் சூழலுமே காரணங்களாக இருந்திருக்கலாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.