ஆவா குழு உருவாக்க பின்னணியில் கோத்தபாய இருக்க வாய்ப்புள்ளது
"ஆவா" குழுவை கோத்தாபாய உருவாக்கினார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார் அந்த தகவல் உறுதியானது அல்ல இருப்பினும் அந்த விடயம் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.
வடக்கில் சூடு பிடிக்கு விவகாரங்களை சாதமாக பயன்படுத்திக் கொள்பவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டால் குறித்த விடயத்தின் பின்னணியில் உள்ளவர் யாரென தெரியவரும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்
ஜாதிக ஹெல உறுமையவின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆவா" குழுவை கோத்தாபாய உருவாக்கினார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஆனால் எமக்கு இதுவரையில் அது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் 250 முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய உதவியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனால் அவ்வாறன விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆவா குழு இவ்வாறான பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்க முடியும் அதன் உண்மை தன்மைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதேநேரம் வடக்கில் சில விவகாரங்கள் சூடு பிடிக்கின்ற போது அது தொடர்பில் பெரிதாக அளட்டிக்கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் பயனெடுப்பவர்கள் எங்கு உள்ளனர் என்பது தொடர்பில் சிந்தித்து பார்த்தால் இந்த விடயங்களில் இருக்கின்ற உள்ளார்ந்த தொடர்புகளை புரிந்துகொள்ள முடியும் என்றார்.