Breaking News

‘ சீடி’ பூச்சாண்டி காட்டும் லிங்கநாதனும் ஒத்தூதும் மென்வலுக் கோஸ்டியும்!



அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் லிங்கநாதன் அவர்கள் சீடி ஒன்று ஒப்படைத்துள்ளதாக 13-10-2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் அவர்கள் எனது முகநூல் உள்பெட்டியில் தெரிவித்தார்.

ஆனால் இன்று சக்தி ரிவியில் தான் அந்த சிடி கொடுக்க இன்று (03-11-2016) போனதாகவும் அங்கே விசாரணைக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்கிறார். அந்தப் பேட்டியிலேயே விசாரணைக்குழு தனது செயற்பாட்டை 03-10-2016 அன்று ஆரம்பித்துவிட்டதாக பேரவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தாகவும் சரியாக ஒரு மாதம் கழித்து தான் இன்று இந்த ஆதாரங்களைக் கொடுப்பதற்காக வவுனியாவிலிருந்து வந்ததாகவும் ஆனால் தன்னால் அதைச் சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

லிங்கநாதனின் இந்தப் பேட்டியானது மக்களை மடையர்களாக்கப்பார்க்கும் முயற்சி. விசாரணைக்குழுவினர் எந்த நேரமும் அலுவலகத்தில் இருக்கவேண்டிய தேவை இல்லை. குழு அமைத்து ஒரு மாதமாகியும் எந்தப் புகாரும் வரவில்லையென்றால் ஏன் அவர்கள் சதா அங்கு தூங்கிக்கொண்டிருக்கவேண்டும். யாராவது புகார்கொடுக்க வருகிறார்கள் என்று சொல்லப்பட்டால்தான் அவர்கள் அங்கு வருவார்கள். பிரதம செயலாளர் செயலகத்தில்தான் அவர்கள் கடமை புரிவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவர்கள் செயற்படுகிறார்களா இல்லையா என்று தெரியாத நிலையிலா இவர் இருந்திருக்கிறார்.

மாகாண சபைக் கூட்டங்களுக்கு வரும்போது இவர் சக உறுப்பினர்களிடமாவது கேட்டுத் தெரிந்திருக்கலாம் அல்லது வவுனியாவில் இருந்து புறப்படும் முன்னர் செயலகத்துக்கு அழைத்துக்கேட்டுவிட்டு வந்திருக்கலாம். வவுனியாவில் இருந்து புறப்படும்போதே அவர்கள் இன்று அங்கு இல்லையென்று இவருக்குத் தெரிந்திருக்கிறது, உடனே ஊடகவியலாளர்களுக்கு அறிவித்துவிட்டுத்தான் இவர் அங்கே சென்றுள்ளார் இவருடைய நோக்கம் எல்லாம் ஊடகத்தில் முதல்வரையும் அமைச்சரையும் அசிங்கப்படுத்துவதே தவிர இவரிடம் ஆதாரம் எல்லாம் இல்லை

சுகிர்தன் அவர்களும் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள்மீது சில குற்றச்சாட்டுக்களை என்னிடம் முன் வைத்தார். அது தொடர்பான விளங்கங்களை அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களிடமும் கேட்டேன் அவர் சொன்ன விளக்கத்திலிருந்து மட்டுமல்ல ஐங்கரநேசன் அவர்களைச் சந்திப்பதற்கு சுகிர்தரன் அவர்கள் ஒளிந்தோடுவதில் இருந்தே மென்வலுக்கோஸ்டியின் யோக்கியதைப்பற்றிப் புரிந்துகொள்ள முடியும்.

சுமந்திரன் ஒரு பிரபல வக்கீல் லிங்கநாதனிடமோ அல்லது வேறு யாரிடமோ ஊழல் தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றப் படியேறி இன்று ஐங்கரநேசனை ஒன்றுமில்லாமல் செய்திருக்கமாட்டார்? இவர்களிடம் ஆதாரம் ஒன்றுமில்லை. கட்டுக்கதைகளை உருவாக்கி ஒருவர்மீது சேறு பூசி அவரின் மக்கள் ஆதரவை இழக்கச் செய்வது இந்த அயோக்கியர்களின் திட்டம்.

“எமது விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்கள் விவசாய உற்பத்திகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரிய பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார். கனிதரும் மரங்களையே கரவானவர்களின் கற்கள் பதம்பார்க்கும். அதனால் அவருக்கு எதிராகக் கற்கள் வீசப்படுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும். எனினும் அமைச்சர் ஐங்கரநேசனும் பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டார். சதா மக்கள் நலம் பேணும் வேலைகளிலேயே மூழ்கி நிற்கும் ஒரு அமைச்சர். அவரின் வழிகாட்டலின் கீழ் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டு விவசாய உள்ளீடுகளைப் பெருக்கப் பாடுபட வேண்டும்” என்று சில மாதங்களுக்கு முன்பு ஐங்கரநேசனைப்பற்றி முதல்வர் சொன்னவற்றையே இங்கே ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கரவானவர்களான லிங்கநாதன் மற்றும் மென்வலுக் குழுவின் கற்கள், கனிதரும் ஐங்கநேசனைப் பதம்பார்க்கின்றனர் ஆனால் அவர் பனங்காட்டு நரி இவற்றை எல்லாம் இலாவகமாக வென்று மக்கள் பணியைத் தொடருவார்.

கலையழகன் கரிகாலன்