2017 வரவு செலவு திட்டம் - போக்குவரத்தும், நலன்புரியும் ஆழ்ந்த உறக்கத்தில்!
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் வாசிக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகி இருந்தனர். நீண்டதொரு வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் வாசித்தார்.
இதன்போது சில சிரேஷ்ட அமைச்சர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை காண முடிந்தது.
பிரதான அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்திருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.மேலும், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் உறங்கியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் வரவுசெவுத்திட்டம் என்பது நிதி அமைச்சரினால் முழுதாக வாசிக்கப்படும். ஒரு வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பட்டியல் போட்டு வாசிப்பதென்பது சிறிய விடயமல்ல.
அவ்வாறிருக்க நாடாளுமன்றத்தில் இதை கேட்டுக்கொண்டு இருக்கும் சிலர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார்கள். இது ஒன்றும் புதிதல்ல.
இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்டம் வாசிக்கப்படும் போது பலர் உறங்கிவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.