பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, கஞ்சாவை கடத்துவந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.