Breaking News

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு- புதிய அரசியல் யாப்புக்கு பிரேரணை



காணி,பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குமாறும், மாகாண சபைகளைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்துமாறும் தெரிவிக்கும் பிரேரணை யொன்று புதிய அரசியல் யாப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்புக்கு பிரேரணைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட உப குழுக்கள் ஆறில், ஒரு குழுவினால் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்னவின் ஆலோசனையின் பேரில் இந்தக் குழு செயற்படுகின்றது.

மத்திய அரசாங்கம், மாகாண சபை மற்றும் பிரதேச சபை போன்ற அரசாங்கங்களிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு இவ்வுப குழுவுக்கு பொறுப்புச் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.