Breaking News

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம்



ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

நொவம்பர் 7ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 7ஆம் நாள் வரையான காலப்பகுதியில், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குறித்தும், ஆராயப்படவுள்ளது. வரும் 15, 16ஆம் நாள்களில், சிறிலங்கா நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படும்.

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவில் இடம்பெற்றுள்ள 10 சுததந்திர நிபுணர்கள், இந்தக் கூட்டத்தில் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர நிபுணர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கியதுமான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.