தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சியின் பலர் சிறைக்குச் செல்வர்- அஜித் பி.பெரேரா
கூட்டு எதிர்க் கட்சியின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியில் போட்டியிடவுள்ள பலர் அடுத்த தேர்தலுக்கு முன்னர் சிறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால், தேர்தல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் தொடர்பு கொண்டு, அமைச்சரிடம் புதிய கட்சி குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.