Breaking News

உங்கள் பேஸ்புக்கில் லட்சம் லைக்ஸ் இருக்கா..? நீங்க லட்சாதிபதி!

எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் ,
இன்ஸ்டாகிராம்..இதுல போஸ்ட்டு போட்டுட்டு இருக்கிறியே...இதுக்கு பதிலா ஒரு வேலைக்கு போயிருந்தா நாலு காசு சம்பாதிச்சிருக்கலாம். என உங்களிடம் யாராவது சொன்னா...அவங்களுக்கு இனிமே கெத்தா பதில் சொல்லுங்க லட்சம் லைக்ஸ் இருந்தா நீங்க தான் லட்சாதிபதி, பத்து லட்சம் லைக்ஸ் இருந்தா நீங்க கோடிஸ்வரன் அப்படினு யாராவது சொன்னா நம்புவீங்களா? ஆனா இனி நம்பி தான் ஆகணும் ஏன் தெரியுமா?

நீங்கள் டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சர்களாக இருந்தால் உங்களை தொடரும் ஒவ்வோரு நபரும் உங்களுக்கு வருமானமாக மாற வாய்ப்புள்ளது. மேலாண்மை பாடங்களில் பொசிஷனிங் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதாவது நீங்கள் ஒரு விஷயத்தை கூறினால் அது சரியான பதிவாக பலரிடத்தில் போய் சேரும் என்ற மனநிலையை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். உதாரணமாக சிலர் திரைப்படங்கள், கேட்ஜெட்களை ரிவ்யூ செய்பவர்களாக இருப்பார்கள் அவர்கள் செயல் 90% மக்களுக்கு பிடித்து அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருந்தால் அவரை அதிக மக்கள் நம்புவார்கள். இந்த நிலையை நீங்கள் அடைந்துவிட்டால் உங்களைப் பின் தொடரும் அனைவரையும் உங்கள் வருமானத்தின் மூலதனம் ஆக்க முடியும்.


அது எப்படி சாத்தியம்?


உங்களை மக்கள் பின் தொடரும் எண்ணிக்கையை பொறுத்து உங்களை டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சராக இந்த சந்தை அங்கீகரிக்கிறது. இந்திய சந்தை நிலவரப்படி ஃபேஸ்புக்கில் 5 லட்சம் ஃபாலோவர்களை (Followers) வைத்திருந்தால் 4 லட்ச ரூபாயும், 10 லட்சம் ஃபாலோயர்கள்
(Followers) இருந்தால் 8.5 லட்சம் ரூபாயும், 60 லட்சத்துக்கு மேல் இருந்தால் 1 கோடி ரூபாய் வரையும் வருமானம் ஈட்ட முடியும். இவ்வளவு பணத்தை விளம்பரத்தின் மூலம் மட்டுமே பெற முடியும். என்பதனை தமிழ்கிங்டொம் வாசகர்களுக்கு தெரிவிப்பதோடு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது பொருளை ப்ரமோட் செய்தால் அந்த நிறுவனம் உங்களுக்கு பணம் கொடுக்கும். இது தான் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் எனப்படுகிறது..
சில நேரங்களில் சமூக வலைதளங்களை நன்கு கவனித்தால் விராட் கோலி ஏதோ ஒரு ஷூ நிறுவன போஸ்ட்டை ஷேர் செய்திருப்பார், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பக்கத்தில் ஏதாவது ஒரு தயாரிப்பின் பதிவு இருக்கும். இவர்களை அதிக நபர்கள் பின் தொடர்வதே இதற்குக் காரணம். இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை இவர்கள் ஈட்டுகிறார்கள். இதனை சில லட்சம் லைக்குகள் வைத்திருக்கும் சினிமா விமர்சகர்கள் துவங்கி தனிநபர்கள் வரை அனைவரும் இதனை தொழிலாக செய்யத் துவங்கியுள்ளனர்.

நியூயார்க்கில் இரண்டு சகோதரிகள் இன்ஸ்டகிராமில் தலா 6 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளனர். இவர்களது மாத வருமானம் 6 இலக்கத்தில் உள்ளது. வெறும் போஸ்ட்கள் மூலம் வருமானத்தை ஈட்டும் இவர்கள் எந்த வேலைக்கும் செல்வதே இல்லை. இந்த வருமானத்தை ஈட்ட மென்பொருள் இன்ஜினியர் ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் உழைக்க வேண்டும்.

இந்த டிஜிட்டல் இன்ஃப்ளுயெஸிங்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று உங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து பணம் வழங்குவது. இரண்டாவது உங்கள் கணக்கில் பதிவிடப்பட்ட பதிவுக்கு வந்த ரெஸ்பான்ஸை பொறுத்து பணம் வழங்குவது. நிறுவனங்கள் இன்ஃப்ளுயென்ஸருக்கு ஏற்ப உத்தியை அமைத்துக்கொள்ளும்.

எப்படி இருக்க வேண்டும் இவர்களது சோஷியல் மீடியா?

1.அடிக்கடி ப்ரோமோட் செய்வதை தவிர்க்க வேண்டும்

2. நம்பகத்தன்மையான பிராண்டுகளை மட்டுமே ப்ரமோட் செய்ய வேண்டும்.

3. விளம்பரதாரர்களுக்கும் சரியான சோஷியல் ரீச்சை வழங்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு 1000 பேர் ஃபாலோயர்களாக இருப்பார்கள் ஆனால் வெறும் 300 பேர் மட்டுமே ஆக்டிவாக இருப்பார்கள் இந்த மாதிரியான கணக்குகள் இன்ஃப்ளுயன்சர்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4. குறைந்தபட்சம் 40% ஃபாலோயர்களால் விரும்பப்படும், பகிரப்படும் அல்லது பார்க்கப்படும் விதம் இருக்க வேண்டும்.

5. தனது சோஷியல் கணக்கை மிகவும் ஃப்ரோஃபஷனலாக கையாளுபராக இருப்பது அவசியம்.


யூ-ட்யூப் - 16 லட்சம் ரூபாய்
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் உங்களிடம் 100000 லைக்குகள் அல்லது பலோவர்ஸ் உடைய பேஸ்புக்கோ,ருவிற்றர்,யுரியூப் அல்லது வேறு சமூக வலைத்தளம் இருக்கிறதா இருந்தால் முயற்சியுங்கள் இணையத்தில் இதற்கான பல நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன..

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்