Breaking News

ஒற்றையாட்சி – சமஷ்டி இரண்டும் இல்லை!



ஒற்றையாட்சிக்கு தமிழர் தரப்பும் சமஷ்டிக்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இரண்டுக்கும் பொதுவான ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசாங்கத்திற்குள் உள்ள ஒரு தரப்பினர் ஆலோசனை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட தரப்பினர் இந்த நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய முறைமையானது, சகல மக்களதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வகையில் அமையவேண்டுமே தவிர, இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் வகையில் அமையக் கூடாதென்பதும் இத் தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.

இதேவேளை, நாட்டிற்குள் சிக்கலை ஏற்படுத்தும் கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டிலும் இத் தரப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.