Breaking News

மருத்துவ பரிசோதனைகளில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

விஷ ஊசி விவகாரம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் முன்னாள் போராளிகள் போதியளவு ஆர்வம் காட்டுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


விஷ ஊசி தொடர்பில் பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மாத்திரமே பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஷ ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

அதன்படி பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 193 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இம்மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்ற போதிலும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பதில் முன்னாள் போராளிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.