Breaking News

தமிழர்கள் கொண்டாடும் அளவுக்கு ஜனாதிபதி அப்படி என்ன செய்தார்?



நாடாளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்பட்டு சில அரச ஆதரவான தமிழ் இணையத்தின் மூலமாக செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில்.

இதே போல் சில நாட்களுக்கு முன்பு மறைந்த இசைக்கலைஞரின் உடலை சுமந்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார், இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரன் தமிழ் நாட்டு அரசியலில் நற்பெயர் பெற்றார். அதேவழியை ஜனாதிபதி பின்பற்றுகிறாரா? என்ற கேள்வி எழுவதுடன், இவ் விடயம் தொடர்பாக சிங்கள மக்கள் பாராட்டுவது ஒரு வகையில் நியாயமானது. அனால் இவ்விடயத்தை தமிழ் இளைஞர்கள் பரவலாக சமூக வலைத்தளங்களில் பரப்பி கொண்டாடுகின்றனர் .

அந்த வகையில் யாழில் இரு மாணவர்கள் படுகொலை, வடக்கில் புதிதாக நூறு புத்த சிலைகள் அமைக்க அனுமதி, இரண்டு நாட்களுக்கு முன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் கைது, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாவார்களா? இப்படி பல கேள்விகள் உள்ள நிலையில், தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து பாராட்த்தக்க வகையில் என்ன செய்தார் என்பதை உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்!

தமிழர்கள் தமக்கு எளிமையான ஜனாதிபதி வேண்டுமென போராடவில்லை….