நிதியமைச்சர் ரவியின் பொறுப்பு பூகம்பமானது
நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் நிதி ஆண்டுக்கான வரவு– செலவுத்திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பொறுப்பு பூகம்பமாக மாறியது.
இரண்டாம் வாசிப்பாக இன்று வரவு–செலவுத்திட்டத்தை முன்வைத்து சிங்கள மொழியில் உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உரையின் ஆரம்பக்கட்டத்தின் போது வரவு செலவுத்திட்டம் உள்ளிட்ட நடைமுறைகளை சமர்ப்பிப்பது நிதியமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பு என்று கூறுவதற்குப் பதிலாக எனது பூகம்பம் எனக்கூறினார். (மாகே பூமிகாவ என்பதற்குப்பதிலாக மாகே பூமிகம்பாவ என்று கூறினார்)
இதனையடுத்து எதிர்த்தரப்பிலிருந்த எம்.பிக்கள் சத்தமாகச் சிரிக்கத்தொடங்கினர்.
குறிப்பாக தினேஷ் குணவர்தன எம்.பி.கைகளை முகத்தில் பொத்தியவாறு சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.
எனினும் தன்னை சூதாகரித்துக் கொண்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சிரிப்பொலியை பார்க்காது தனது உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.