கனகபுரம் துயிலும் இல்லம்! நேற்று சொன்ன செய்திகள்!
கல்லறைகள் வெறும் கற்குவியலாக இருந்தபோதும் ஒவ்வொரு மாவீரனின் உறவுகளும் அவன் உடல் புதைந்த இடம் தேடி கண்ணீரோடு விளக்கேற்றினர்.
தன் மனச்சுமைகளை ஒவ்வொரு தமிழனும் கண்ணீரால் கழுவி இறக்கி சுமை குறைத்தான் .ஆழ்ந்த உறக்கம்விட்டெழுந்து ஒவ்வொரு வீரரும் தாய்தந்தை மடியணைத்தது போன்ற நெகிழ்ச்சி ஒவ்வோர் முகங்களிலும் தெரிந்தது .
வீரம் சாகா மண்ணில் வீரனின் உறவொன்றில் பெரும் குமுறல் தமிழீழ எல்லைகளையும் தாண்டி யாவரின் மனங்களிலும் இரத்தம் தோய வைக்கிறது .