ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹிலாரி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வரும் ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரத்திற்காக இதுவரை 31,127 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகமே பரபரப்பாக எதிர்ப்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவு இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது.
ஆட்சியை கைப்பற்ற ஜனநாயக கட்சி சார்ப்பாக ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்ப்பாக டொனால்ட் டிரம்பும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹிலாரி கிளிண்டன் செலவிட்டுள்ள தொகையின் விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த 575 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரத்திற்காக ஹிலாரி இதுவரை 2.1 பில்லியன் டொலர்(3,11,27,25,00,000 கோடி இலங்கை ரூபாய்) செலவிட்டுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்று வரும் தேர்தலின் இறுதி பிரச்சாரத்தை ஹிலாரி Philadelphia நகரில் முடித்துக்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா, அவருடைய மனைவி மீச்செல், ஹிலாரியின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியான கிளிண்டன் மற்றும் ஹிலாரியின் மகள் செல்சியா ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஹிலாரி பேசியபோது, ‘தயவு செய்து அனைவரும் சென்று வாக்களியுங்கள். அமெரிக்காவிற்கு எப்போதும் ஒரு சாம்பியன் தேவைப்படுகிறது. அந்த சாம்பியனாக நான் இருக்க விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஒபாமா பேசியபோது, ‘குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு சிறிதும் பொருத்தம் இல்லாதவர். ஆனால், ஹிலாரியை உலக மக்கள் மதிக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.
ஒபாமாவை தொடர்ந்து கிளிண்டன் பேசியபோது, ‘அமெரிக்கா நாடு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது அதற்கான கையெழுத்து நடைபெற்றது இதே Philadelphia நகரில் தான்.
தற்போது இதே நகரில் நாங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறோம். இதன் மூலம் அமெரிக்கா ஒரு வளமான முன்னேற்றத்தை அடையும்’ எனக் கூறியுள்ளார்.