வட பகுதி இராணுவத்தை வெளியேற்றித் தருமாறு ஐரோப்பா சங்கத்திடம் மனு
வட மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படையினரை முழுமையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஐரோப்பா சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடக்கில் ஒரு லட்சம் இராணுவத்தினர் காணப்படுவதாகவும் வடக்குக்கு விஜயம் செய்த ஐரோப்பா தூதுக் குழுவிடம் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இராணுவத்துக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகளையும் இக்குழுவிடம் அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிங்கள மீனவர்களுக்கு மாத்திரம் வடக்கில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட இராணுவம் அனுமதிப்பதாகவும், சிவில் பாதுகாப்புப் படையினர்தான் வடக்கிலுள்ள சகல ஆரம்பப் பாடசாலைகளையும் நிருவகிப்பதாகவும் முதலமைச்சர் ஐரோப்பா தூதுக் குழுவிடம் முறைப்பட்டுள்ளார்.
வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பெண் பொலிஸாருக்கு சேவையில் ஈடுபட முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் முதலமைச்சர் மேலும் தனது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.