ஆவா' குழு தொடர்பில் விசாரணை அவசியம்: சீ.வி
வடக்கில் உலாவும் ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச உள்ளீடுகள் அவசியம் தேவை என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோனெஸ் ஏன்லேவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி .விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வடக்கு முதலமைச்சர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.யுத்த குற்ற விசாரணையில், சர்வதேச உள்ளீடுகள் இன்றி, நீதி கிடைக்காது எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என்றும், இலங்கையின் நீதித்துறை தொடர்பில் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.