சித்திரவதைகளுக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை: மனித உரிமை ஆணைக்குழு
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு எதிராக சட்டமா அதிபரும் பொலிஸ்மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கைதுசெய்யப்பட்ட ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, சித்திரவதைகள் மற்றும் சில முறையற்ற செயற்பாடுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் குறித்த அறிக்கையை சட்டமா அதிபர் தமது ஆணைக்குழுவிற்கு வழங்கவில்லையென்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தடுப்பில் இருந்தவர்கள் மரணித்தமை குறித்து சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.