விஷ ஊசி ஏற்றப்பட்டு இலங்கை பெண் படுகொலை…! அம்பலமாகும் அதிர்ச்சி உண்மைகள்
வெளிநாட்டு வேளைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக இவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் மூலம் இலங்கைக்கு வருமானமும் கிடைக்கப்பெறுகின்றது.
குறிப்பாக குடும்ப வறுமை காரணமாக மலையகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர்.
இவ்வாறு வீட்டுப்பணிபெண்களாக செல்லும் அவர்கள், அங்கு சொல்லனா துயரங்களை அனுபவிக்க நேர்கின்றது. சிலர் தமது உயிரையும் பறிகொடுக்கவும் நேர்கின்றது.
அந்த வகையில் ஹட்டன் பகுதியினை சேர்ந்த கல்பனா என்ற பெண் மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்ற நிலையில் அங்கு விஷ ஊசி ஏற்ப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயது மதிக்கத்தக்க அந்த பெண் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில், விஷ ஊசி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மத்திய கிழக்கு நாட்டிலிருந்து தொடர்பு கொண்ட மற்றுமொறு பணிப்பெண் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தான் பார்க்க மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதி அமைச்சரிடம் கூறியுள்ளார்.
மேலும் பல கர்ப்பிணி பெண்களும் தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர், குறித்த அனைவரும் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் சில அதிகாரிகள் தாம் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக தெரிவித்து ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட கல்பனா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டமை குறித்த, குரல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.